பொள்ளாச்சி அருகே பரபரப்பு! - பைக்கில் சென்றவர் கிணற்றில் விழுந்து சாவு..!

-MMH

பொள்ளாச்சி அடுத்த ஜமீன் புரவிபாளையம் மதுர வீரன் கோவில் வீதியைச் சேர்ந்த பட்டத்தரசன் (வயது 24) கூலித் தொழிலாளியான இவர் கருமாண்ட கவுண்டன் புதூர் அருகே உள்ள தோட்டத்து பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தார் அப்பொழுது எதிர்பாராத விதமாக அருகிலிருந்த கிணற்றில் பைக்குடன் தவறி விழுந்தார்.

நீச்சல் தெரியாததால் அவர் நீரில் மூழ்கி இறந்தார் இது குறித்து அவரது தாயார் ரங்கம்மாள் வடக்கிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரை பெற்றுக் கொண்ட எஸ் ஐ  ராஜேந்திர பிரசாத் சம்பவ இடத்திற்கு நேரில்  சென்று உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

- M.சுரேஷ்குமார் கோவை தெற்கு.

Comments