சென்னை பெருநகரில் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்ய ஆணையர் உத்தரவு!!

-MMH

சென்னை பெருநகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும் , குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும் , சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் உத்தரவின்பேரில் , குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்க தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக , குற்றச் செயல்களில் ஈடுபட்ட

1 ) ரியாஸ் , வ / 34 , இராயபுரம் ,

2 ) நஸ்ருதீன் ( எ ) நசீர் , வ / 28 , கூடுவாஞ்சேரி , செங்கல்பட்டு மாவட்டம் ,

3 ) முகமது பயாஸ் , வ / 23 , கொளத்தூர் , சென்னை -99 ஆகிய 3 நபர்கள் மீதும்

மாதவரம் பகுதியில் துப்பாக்கி மற்றும் கத்தி வைத்து மிரட்டி பணம் பறித்தல் தொடர்பாக குற்ற வழக்குகள் M - 1 மாதவரம் காவல் நிலையத்திலும் , .

4 ) சீனிவாசன் ( எ ) சீனு , வ / 24 , வேங்கைவாசல் , என்பவர் மீது S - 10 பள்ளிக்கரணை காவல் நிலையத்திலும் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டதால் , இவர்களை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய M - 1 மாதவரம் மற்றும் S - 10 பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர்கள் பரிந்துரை செய்ததின்பேரில் , சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால் , இ.கா.ப , அவர்கள் , மேற்படி குற்றவாளிகளை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய நேற்று ( 30.11.2020 ) உத்தரவிட்டார் . அதன்பேரில் , மேற்படி 4 குற்றவாளிகளும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

-பாலாஜி தங்க மாரியப்பன் சென்னை போரூர்.

Comments