கோவை உக்கடத்தில் பரபரப்பு..! டன் கணக்கில் ரேசன் அரிசி பறிமுதல்.! பின்னணி யார்...?
50 ஆயிரம் மதிப்பிலான 2 டன் ரேசன் அரிசி வீட்டில் பதுக்கல் 3 பேருக்கு போலீஸ் வலை வீச்சு. கோவை உக்கடம் பகுதியில் ஒருவர் வீட்டில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் ரேஷன் அரிசி மூட்டைகள் 2 டன் 50 ஆயிரம் மதிப்பிலான அரிசி பதிக்கி வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து உக்கடம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து உக்கடம் போலீசார் மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த வீட்டினுடைய பூட்டை உடைத்து உள்ளே சென்று ஆய்வு நடத்தினர்.
அப்போது அந்த வீட்டில் 2 டன் ரேஷன் அரிசி 50 ஆயிரம் மதிப்பிலான மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து உக்கடம் அரிசி கடை வீதியில் உள்ள கண்ணன் என்பவரது வீட்டில் இருந்த ரேஷன் அரிசிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து வீட்டை பூட்டி சீல் வைத்தனர்.
அத்துடன் இதற்கு உடந்தையாக செல்வ புரத்தைச் சேர்ந்த மணி மற்றும் முகமது ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் ரேசன் அரிசி அரசு குடோனுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அரசி எதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. கேரளாவுக்கு கடத்துவதற்கான முயற்சியா, வேறு கடத்தல் சம்பவங்களில் தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-சீனி போத்தனூர்.
Comments