பி எட் படிப்பு விண்ணப்ப பதிவு - ஆன்லைனில் இன்று துவக்கம்!

 

-MMH

பி.எட்., பட்டப்படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று முதல் துவங்குகிறது; வரும், 10ம் தேதி வரை பதிவு செய்யலாம்.அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லுாரிகளில் நடப்பு கல்வியாண்டில் பி.எட்., பட்டப்படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு ஆன்லைனில் இன்று துவங்குகிறது. எஸ்.சி., - எஸ்.டி., விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணமாக, 250 ரூபாய் செலுத்த வேண்டும். மற்ற பிரிவு மாணவர்கள் விண்ணப்ப கட்டணம், 500 ரூபாய் செலுத்த வேண்டும்.மாணவர்கள் தங்களது சான்றிதழ்களை www.tngasaedu.in என்ற இணைய முகவரியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இணையதளத்தில் பதிவு செய்வதில் ஏதேனும் சிரமம் ஏற்பட்டால், 044-22351014, 22351015, 28278791 என்ற எண்களில் காலை, 10.00 மணி முதல் மாலை, 06.00 மணி வரை தொடர்பு கொண்டு கூடுதல் விபரம் மற்றும் வழிகாட்டுதல்களை பெறலாம்.

-அருண்குமார் கோவை மேற்கு.

Comments