குறைந்து வரும் கொரோனா.. !! விழிப்புணர்வு அவசியம்!!

    -MMH 

     சீனாவில் ஜனவரி மாதத்தில் தொடங்கிய கொரோனா என்னும் கொடிய நோய் மக்களை பெரும் பீதியில் ஆழ்த்தியது. அதிர்ந்து போன சீன மக்கள் அதிலிருந்து சிறிது சிறிதாக உயிர் இழப்பை சந்தித்தனர்.

பின்பு அண்டை நாடான இந்தியாவையும் அது தொடர்ந்து உலக நாடுகளையும் விட்டு வைக்கவில்லை. உயிர் இழப்பை மக்கள் சந்தித்தனர். மார்ச் மாதத்தில் இந்தியாவின் கேரளா பகுதியில் முதன் முதலில் கோரோனா தொற்று நோய் தாக்கியது. பின்பு மற்ற மாவட்டங்களிலும் பரவ தொடங்கியது.

பல உயிர்களை எடுத்து இந்திய அளவில் அப்பாவி மக்களையும் முக்கிய பிரமுகர்கள் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த கொரோனா என்னும் நோய் எட்டு மாதத்திற்கு பிறகு அதன் வீரியம் சிறிது குறைந்து.

மாவட்டங்கள் முழுவதும் உயிரிழப்பு குறைந்துள்ளது ஆனால் விழிப்புணர்வு இருப்பினும் நோய்த்தொற்று தாக்கம் குறையவில்லை. மக்கள் அனைவரும் விழிப்புடன் இருந்தால் தங்களது உயிர்களை காத்துக் கொள்ள முடியும். முக கவசம் அணிதல், கைகளைக் கழுவுதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல்  ஆகியவற்றின் மூலமாக நாம் இந்த பெரும் தொற்றிலிருந்து நம்மை காத்துக் கொண்டு மற்றவர்களுக்கும் சொல்லி தந்து இந்த நோயில் இருந்து முற்றிலும் விடுபட வேண்டும் மக்களாகிய நாம் உறுதி மொழி எடுப்போம்.

-ஈஷா,கோவை.

Comments