குடும்பத்தை காவு வாங்கும் டாஸ்மார்க்...?

     -MMH

     கோவை மாவட்டத்தில் குடித்துவிட்டு குடும்பத்தை உதாசீனப்படுத்திய பெரும் குடிகாரர்களின் சோக நிலை!. குடி குடியை கெடுக்கும் குடிப்பவர்கள் உடல் நலத்தையும் கெடுக்கும் என்பார்கள்.

குடிப்பவர்களை கேட்டால்  உடல் சோர்வுக்கு குடிக்கிறேன், மன உளைச்சலுக்கு குடிக்கிறேன், கவலை மறப்பதற்காக குடிக்கிறேன் இதே நிலைதான் பெண்களுக்கும் இருக்கும். உடல் சோர்வும் மன உளைச்சலும் அதற்காக அவர்களும் குதித்துவிட்டால் உலகின் நிலை என்ன..இது ஒருபுறமிருக்க.

சிறு வயது இளைஞர்கள் மதுவுக்கு அடிமையான சோக நிலையும் வேதனையும் காணப்படுகிறது. குடிப்பதனால் ஒரு நன்மையும் இல்லை என்று தெரிந்தே குடிக்கும் மதுப் பிரியர்கள் தங்களுடைய வாழ்க்கையையும் இழந்து மட்டும்மின்றி தன்னுடைய குடும்பத்தையும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு இறுதியில் விட்டு விட்டு சென்று விடுகிறார்கள்.

பின்பு அந்த குடும்பம் நடுரோட்டில் நிற்கும் நிலை ஏற்படுகிறது. இதை கருத்தில் கொள்ளாமல் அரசாங்கம் ஒருபுறமிருக்க, குடியிலிருந்து மீட்க முயற்சி ஒருபுறம்  நடந்து கொண்டிருக்கிறது. என்று தீருமோ என்ற அவல நிலையில் காணப்படும் குடும்பம். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது குடிப்பவர்களய் பார்த்து திருந்தாவிட்டால் குடியை ஒழிக்க முடியாது.

-ஈஷா,கோவை.

Comments