நீதிக்கட்சியின் முதலமைச்சரவை பதவியேற்ற நூற்றாண்டு தொடக்க விழா!

 

-MMH

நீதிக்கட்சியின் முதலமைச்சரவை பதவியேற்ற நூற்றாண்டு தொடக்க விழா!நீதிக்கட்சித் தலைவர்களுக்கு, திராவிடர் கழகத் தலைவர், கி.வீரமணி மரியாதை! நீதிக்கட்சி என்றழைக்கப்பட்ட தென்னிந்திய நலவுரிமைச் சங்கம், 17.12.1920 அன்று சென்னை மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, கடலூர் ஏ.சுப்பராயலு ரெட்டியார் தலைமையில் மூவர் கொண்ட அமைச்சரவை பதவியேற்ற நாள்! (மற்ற இரு அமைச்சர்கள் - பனகல் அரசர், கே.வி.ரெட்டி).

நீதிக்கட்சியின் முதலமைச்சரவை பதவியேற்ற நூற்றாண்டு தொடக்க விழாவையொட்டி சென்னை பெரியார் திடலில் நேற்று (17.12.2020) காலை, நீதிக்கட்சித் தலைவர்களின் உருவப் படங்களுக்கு திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

உடன் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொருளாளர் வீ.குமரேசன், வெளியுறவுத் துறை செயலாளர் கோ.கருணாநிதி, மாணவர் கழக மாநிலச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தலைமைக் கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா மற்றும் பலர் பங்கேற்றனர்.

-பாரூக், சிவகங்கை.

Comments