எய்ம்ஸ் எங்கே❓ போஸ்டரால் மதுரையில் பரபரப்பு!!

 

-MMH

மதுரை தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளை, பிரதமர் மோடி 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். முதலில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்கென 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம்

₹. 5 கோடி ஒதுக்கப்பட்டது. அதன்பின் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்றது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் பணிகள் தொய்வாக நடைபெற்றுவருகிறது.

இந்தச் சூழலில், மதுரையில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்த எய்ம்ஸ் மருத்துவமனையைக் கண்டுபிடித்துக் கொடுத்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என

ஒரு செல்போன் எண்ணைக் குறிப்பிட்டு "எங்கே எய்ம்ஸ்?" என்ற கேள்வியோடு பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி ஆகியோர் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்ட புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

இந்தப் போஸ்டர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-பாரூக், சிவகங்கை.

Comments