தஞ்சை மாவட்டத்தில் திமுக சார்பில் மாதிரி கிராம சபைக் கூட்டம்!!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரத்தை அரசியல் கட்சியினர் துவங்கியுள்ளனர். அதிமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியுள்ள நிலையில், திமுக சார்பில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி நேற்று (23.12.2020) தமிழகத்தில் உள்ள 16 ஆயிரத்திற்கும் மேலான கிராமங்கள் மற்றும் வார்டுகளில் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற பெயரில் திமுக சார்பில் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. அதன் படி தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியம் புளியக்குடி கிராமத்தில்,
திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் மு. க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி அதிமுகவை நிராகரிக்கிறோம் என்கின்ற முன்னெடுப்பில், ஆளும் அதிமுக அரசின் குறைகளை மக்களிடத்தில் எடுத்துக்கூறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பொறுப்பாளர் திரு சு.கல்யாணசுந்தரம் அவர்கள் தலைமை தாங்கினார்.
துணைப் பொறுப்பாளர் அய்யாஅரசு, மேலவை உறுப்பினர் சண்முகம் M.P மற்றும் அம்மாபேட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் PSகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அம்மாப்பேட்டை தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட புளியக்குடி ஊராட்சியில் இந்த "கிராம சபை" கூட்டம் இனிதே நடைபெற்றது. திரு சண்முகவேல், மாணவரணி செயலாளர் திரு பிரேம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். கிராம சபை கூட்டத்தில் இளைஞர் அணியை சேர்ந்தவர்கள், மாணவரணியைச் சேர்ந்தவர்கள் மற்றும் கழகத்தின் மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர் . இந்த நிகழ்ச்சி கிராம சபை கூட்டம் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதற்கு ஒரு முன்னோட்டமாக இருந்தது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ராஜசேகரன் தஞ்சாவூர்.
Comments