கபசுர குடிநீரை குடிக்கும் போது, இந்த விஷயங்களை கவனத்தில் கொள்ளுங்கள்!!

     -MMH

     புது தில்லி: கொரோனாவிலிருந்து தப்ப நீங்கள் குடிக்கும் கபசுர குடிநீர், காரணமாக பக்க விளைவுகள் ஏற்படும் வாய்ப்பும் உண்டு. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று ஒரு பழமொழி உண்டு. இதை தேவைக்கு அதிகமாக குடிக்கும் போது, சில பக்க விளைவுகள் ஏற்படலாம்.

கொரோனா வைரஸ் (Coronavirus) பரவி வரும் நிலையில், நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) அதிகரிக்க கபசுர குடிநீர் குடிக்கும் பழக்கம் மக்களிடம் பரவலாக உள்ளது. இதை நீங்கள் அதிக அளவு குடித்தால், மூக்கில் இருந்து இரத்தம் வருதல், கொப்புளங்கள், வயிற்றில் எரிச்சல் போன்ற உணர்வு ஏற்படுதல், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உட்பட பல பக்க விளைவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

இது நமது உடலில் பாதிப்பை ஏற்படுத்தாத வண்ணம் தேவையான அளவு மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், இது உடலின் சூட்டை மிகவும் அதிகரிக்கும். தேவைக்கு அதிகமான அளவில் இதை குடிக்கும் போது, அது மேற்கூறிய சில பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.

அனைத்திந்திய ஆயுர்வேத கழகத்தின் (AIIA) தலைமை இயக்குநர் தனுஜா நேசாரி, சூட்டை ஏற்படுத்தக் கூடிய கஷாயங்களை அதிகம் குடிக்கும் போது, மூக்கில் இருந்து இரத்தம் வருதல், கொப்புளங்கள், வயிற்றில் எரிச்சல் போன்ற உணர்வு ஏற்படுதல், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் போன்ற பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது எனக்கூறுகிறார்.

அதனால், ஆயுஷ் அமைச்சகம் (Ayush Ministry) பரிந்துரைத்த அடிப்படையில், சரியான அளவை மட்டுமே அருந்த வேண்டும். அதேநேரத்தில் இந்த கப சுர குடிநீர் சூட்டை கிளப்பாமல் அதனை நீர்க்க செய்து பருகலாம். இதன்மூலமும் பக்க விளைவுகளை தவிர்க்க முடியும்.

இருமல் இருக்கும் போது, கப சுர குடிநீரை சிறிது அதிகம் குடித்தால் பரவாயில்லை. எனினும் பித்த சரீரம் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஒருவேளை பக்க விளைவுகள் ஏற்பட்டால், அதாவது வாயில் கொப்புளங்கள் அல்லது புண் ஏற்பட்டால், ஏலக்காய் அல்லது வெற்றிலையை மென்று சாப்பிடலாம். மோர் குடிக்கலாம் மற்றும் நல்ல எண்ணெய் தடவலாம்.

அதனால், நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) அதிகரிக்க கபசுர குடிநீரை குடிக்கும் போது, இந்த விஷயங்களை எல்லாம் கவனத்தில் வைத்துக் கொண்டால், அதனால் ஏற்படும் பக்க விளைவுகளை தவிர்க்கலாம். கொரோனாவிலிருந்தும் தப்பிக்கலாம்.

-சுரேந்தர்.

Comments