பிரம்மபுத்ரா நதியில் நீர் மின்நிலையம் அமைக்க சீனா திட்டம்!!

    -MMH

     புதுடில்லி: தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் பாயும் பிரம்மபுத்ரா நதியில் புதிய நீர் மின்நிலையம் அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது. அதனால் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க அருணாச்சலப் பிரதேசத்தில் புதிய அணை கட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நம் அண்டை நாடான சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் இருந்து பாயும் பிரம்மபுத்ரா நதி நம் நாட்டின் அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் முக்கிய நீராதாரமாக உள்ளது. திபெத்தில் இந்த நதியின் குறுக்கே நீர் மின் நிலையம் அமைக்கப் போவதாக சீனா சமீபத்தில் கூறியுள்ளது. இதனால் அருணாசலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நீர் தடுப்பாட்டு ஏற்படுவதை தடுக்கவும் கிடைக்கும் கூடுதல் நீரை சேமித்து வைக்கவும் அருணாசலப் பிரதேசத்தில் புதிய அணை கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது

மேலும் இங்கு நீர்மின் நிலையமும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விரிவான திட்டத்தை மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சகம் உருவாக்கியுள்ளது. விரைவில் இதற்கு ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-சுரேந்தர்.

Comments