தமிழகத்தில் தற்போதய கொரோனா நிலவரம்!!

    -MMH

     தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பேருக்கு 1,391 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 4 பேர் வெவ்வேறு மாநிலத்தில் இருந்து வந்தவர்கள். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,87,554 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் தற்போது 10,938 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 356 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 216867ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 209549 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 3867 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவையில் இன்று 139 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 49291 ஆக அதிகரித்துள்ளது. 47712 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 616 பேர் பலியாகியுள்ளனர்.

குறைந்தபட்சமாக பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று 2 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 2246 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 2219 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது 2 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

 தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 69,903 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 1,20,41,933 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இன்று 1,426 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை குணமானோர்களின் எண்ணிக்கை 7,64,854 ஆக அதிகரித்துள்ளது. இன்று 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 11,762ஆக உயர்ந்துள்ளது.

-ஸ்டார் வெங்கட்.

Comments