வேளாண் சட்டங்களை கண்டித்து பொள்ளாச்சி ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட ம.ஜ.க.வினர்!!

     -MMH

     கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மத்திய  அரசு நிறைவேற்றியுள்ள விவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்டங்களை கண்டித்து பொள்ளாச்சி ரயில் நிலையத்தை மஜக வினர் நேற்று  முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

போராட்டத்திற்கு நகர செயலாளர் ராஜாஜெமீஷா அவர்கள் தலைமை வகித்தார். மேலும்  தொழிற்சங்க மாநிலச் செயலாளர் கோவை MH.ஜாபர் அலி,  IKP மாநில செயலாளர் லேனாஇஷாக், மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், சிங்கை சுலைமான், KU.முஸ்தபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில்  துணை பொதுச் செயலாளர் சுல்தான்அமீர், கொள்கை விளக்க அணி மாநில செயலாளர் கோவை நாசர் ஆகியோர் கண்டன உரையாற்றினர். சிறப்பு அழைப்பாளர்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் பிரபு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுக்கா செயலாளர் மகாலிங்கம், தந்தை பெரியார் திராவிட கழகம் நகர செயலாளர் அசோக், நாம் தமிழர் கட்சி பகுதி செயலாளர் கிருஷ்ணன், மதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் குகன் மில் செந்தில், பழனி பாபா அறக்கட்டளை காஜாமைதீன்  ஆகியோர் கண்டன கோஷங்களை எழுப்பி உரையாற்றினர்.

தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் கோவை சம்சுதீன், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் மன்சூர்  இளைஞரணி மாவட்ட செயலாளர் அன்சர், துணைச் செயலாளர்கள் செய்யது, சதாம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அமீர் அப்பாஸ், வடக்கு பகுதி செயலாளர் ஜமால், பொள்ளாச்சி நகர துணை செயலாளர்கள் அன்சாரி, அப்துல் காதர், அப்பாஸ், மற்றும் பொள்ளாச்சி, ஒன்றிய, ஊராட்சி,  கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளானோர் பங்கேற்றனர்.

மேலும் ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட மஜக வினருக்கும் காவல்துறைக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.

-M.சுரேஷ்குமார், கோவை தெற்கு.

Comments