விவசாய சட்டத்திற்கு எதிராக போராடி உயிரிழந்த விவசாயிகளுக்கு வீரவணக்கம்!!

     -MMH

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டத்திருத்த மசோதாவை கண்டித்து டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் அங்கு போராடி வந்த விவசாயிகளில் சுமார் 40 விவசாயிகள் உயிரிழந்தனர். இந்நிலையில் இன்று விவசாய தினத்தை முன்னிட்டு உயிரிழந்த அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு கோவை செஞ்சிலுவை சங்கம் அருகில் நடைபெற்றது. 

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் உயிரிழந்த விவசாயிகளின் புகைப்படத்திற்கு மலர் தூவி வீர வணக்கம் செலுத்தினர். மேலும் இதில் கலந்துகொண்டவர்கள் விவசாய சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். 

இதில் கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கலந்துக்கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

-சீனி,போத்தனுர்.

Comments