"அரசு வழிகாட்டுதலின்படி கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு சிறப்பு பிராத்தனைகள் நடைபெறும்" !! திமோத்தி ரவீந்தர் பேட்டி!!
அரசு வழிகாட்டுதலின்படி கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு சிறப்பு பிராத்தனைகள் நடைபெறும்.கோவை திருமண்டல பேராயர் திமோத்தி ரவீந்தர் பேட்டி.
கோவை பந்தய சாலை சி.எஸ்.ஐ திருமண்டல அலுவலகத்தில் கோவை மாவட்ட பேராயர் திமோத்தி ரவீந்தர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது பேசிய அவர்
அரசு வழிகாட்டுதலின்படி கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு சிறப்பு பிராத்தனைகள் நடைபெறும் எனவும் 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் சிறப்பு பிராத்தனையில் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யபட்டு உள்ளதாக தெரிவித்தார்.கொரோனா பெருந்தொற்று காலத்தில் தென்னிந்திய திருச்சபை நிதி பற்றாகுறை ஏற்பட்ட போதும் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்யபட்டதாக தெரிவித்த அவர் எட்டு மாவட்டத்தில் 60,000 பேருக்கு தேவையான உதவிகள் செய்யபட்டு உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் கொரோனா காலகட்டத்தில் முன்கள பணியாளர்கள் பண பாராட்டபட வேண்டிய ஒன்று எனவும் இதில் பத்திரிகையாளரின் பங்கு மிக முக்கியமானது எனவும் தெரிவித்தார்.தென்னிந்திய திருச்சபை ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு செய்யபட்டு உள்ளது எனவும் இதில் பலர் பயணடைந்து உள்ளனர் என கூறியவர் திருச்சபை மூலம் நடத்தப்படும் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு 20% முதல் 75% வரை விலக்கு அளிக்கபட்டத்காகவும் தெரிவித்தார். இந்தியா வல்லரசு ஆக அனைவரும் ஒற்றுமையுடம் செயல்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்த அவர் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு எவ்வாறு உதவ முடியும் என ஆலோசனை செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
-சீனி,போத்தனுர்.
Comments