டெங்கு காய்ச்சலை தடுக்கக் களமிறங்கும் சிங்கம்புணரி சேவுகா அரிமா சங்கம்!!
சிங்கம்புணரியில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துவிட்ட நிலையில் டெங்கு காய்ச்சல் பரவும் சாத்தியக்கூறுகள் இருப்பதால், சிங்கம்புணரி சேவுகா அரிமா சங்கம் சார்பில் 14,15,16-12-2020 ஆகியமூன்று நாட்களுக்கு சிங்கம்புணரி அண்ணா சிலை முன்பாக நிலவேம்பு குடிநீர் முகாம் நடத்தப்படுகிறது.
முதல் நாளான நேற்று அரசு சித்த மருத்துவர் திரு.சரவணன் அவர்கள் முன்னிலையில்,சேவுகா அரிமா சங்கத் தலைவர் செல்வகுமார், செயலாளர் முருகேசன், பொருளாளர் செல்வம் ஆகியோர் முகாமைத் துவக்கி வைத்தனர். வழக்கறிஞர் பழ.துரைவேலவன், எஸ்எஸ் குழுமம் சந்திரசேகர், பொறியாளர்.-கண்ணன், கருணாநிதி, அக்ரி கருணாகரன், அக்ரி பாலமுருகன், பிரபு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினர்.
காலமறிந்து நடத்தப்படும் இந்த முகாமில் அதிக பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
- பாருக், சிவகங்கை.
Comments