செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு!!

    -MMH

    சென்னை: புரெவி புயலின்  வெளிப்புற சுற்று சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நெருங்கிக் கொண்டிருக்கும்  நிலையில்  கடலோர மாவட்டங்களில் கனமழை பரவலாக பெய்து வருகிறது. இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி நிறைவாக நிரம்பி வருகிறது. அதன் காரணமாக இன்று  பிற்பகல் 12 மணியளவில் சுமார் ஆயிரம் கன அடி அளவுக்கு திறந்துவிடப் படுகிறது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பொதுப்பணித் துறையினர் எச்சரித்துள்ளனர்.

 மாநகராட்சி ஆணையர் பேட்டி:

"செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் அனைத்து குழுக்கள் தயார் நிலையில் உள்ளது என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். நிமிடத்திற்கு நிமிடம் தகவல் கேட்டு பெறப்படுகிறது. மேலும், தேவை என்றால் நிவாரண முகாம்கள் திறக்கப்படும்," என்று தெரிவித்துள்ளார்.

நாளைய வரலாறு செய்திக்காக,

- ராஜசேகரன், பாலாஜி தங்கமாரியப்பன்.

Comments