மழை நீர் தேக்கத்தால் போக்குவரத்து நெரிசல்..!!

    -MMH

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதிகளில் தொடர் மழையின்  காரணம் ஆங்காங்கே நீர் தேங்கி உள்ளது. பொள்ளாச்சி கிழக்கு மறப்பேட்டை பகுதியில் உள்ள பாலத்தின் அருகில் நீர் அதிகம் தேங்கி உள்ளது.

பிரதான சாலை ஆன உடுமலை பழனி கரூர் செல்லும் இவ்வழியே வரும் வாகனங்கள் நீர் தேக்கத்தால் நின்று நின்று வருகிறது. வாகனங்கள் மெதுவாக நகர்வதால் வாகன போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. ஆம்புலன்ஸ் போன்ற அவசர வாகனங்கள் செல்லவும் தடையாக உள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-V. ஹரிகிருஷ்ணன்,

பொள்ளாச்சி கிழக்கு.

Comments