வெவேறு டிகிரி முடித்தவரின் ஆசிரியர் பணியை ரத்து செய்ய - மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு!!

     -MMH 

    தமிழ்நாடு அரசின் கீழ் செயல்பட்டுவரும் தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரையிலான நிறுவனங்களுக்கு ஆசிரியர்களையும், பேராசிரியர்களையும் தேர்ந்தெடுப்பதற்காக இவ்வாரியம் செயல்பட்டு வருகிறது. இந்திய அரசின் மனிதவள மேம்பட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் வழிகாட்டுதலின்படி, தமிழக பள்ளிக்கல்வித்துறை இந்தத் தேர்வுக்கான அரசாணையை வெளியிட்டது.

இதன்படி, தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் நியமனத்திற்கு ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வை நடத்தும் முகமையாக இயங்கி வருகிறது. முறையான அறிவிப்பு வெளியிடப்பட்டு நடத்தப்படும் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவர்கள் தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள்.

இந்நிலையில் இரண்டு ஆண்டுகள் பிஎஸ்சி கணிதம், மூன்று ஆண்டு பி.ஏ வரலாறு படித்தவருக்கு வழங்கிய ஆசிரியர் பணி நியமனத்திற்கு தடை விதித்து ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இவ்வாறு பட்டம் பெறுவதற்கு யுஜிசி அனுமதி அளித்துள்ளதா? பல்கலைகழகம் வியாபார நோக்கில் செயல்பட கூடாது எனக்கூறி, ஆசிரியர் பணி நியமனம் வழங்கிய தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

-சுரேந்தர்.

Comments