பொள்ளாச்சி ஆழியார்..!! ஹேப்பி சண்டே..!!

 

-MMH

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுலா இடமான ஆழியாறு பகுதியில் மக்கள் கூட்டம். பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் வழியில் 23 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுற்றுலா இடம்தான் ஆழியாறு அணை இங்கு கடந்த ஒரு சில மாதங்களாக கோரோனோ நோய் தொற்றின் காரணம் பூட்டி வைக்கப்பட்ட நிலையில் கடந்த மாதங்களில் மீண்டும் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

அணை என்பதால் கண்ணுக்கு குளிர்ச்சியும் பார்ப்பதற்கு ரம்மியமாகவும் காட்சி அளிக்கிறது. ஞாயிற்றுக்கிழமை ஆன இன்று மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது  நாம் பார்க்கலாம். கோவை மற்றும் மேட்டுப்பாளையம் பழனி போன்ற வெளியூர்களில் இருந்து குடும்பத்துடன் வந்து செல்கின்றனர்.

உணவுகள் சமைத்தும் அருகில் மீன் பிடித்து சமைத்தும் இந்நாளை மகிழ்வுடன் செலவிட்டு செல்கின்றனர். அருகில் குரங்கு நீர்வீழ்ச்சி அருவி உள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கும் மக்கள் காலை முதல் வந்த நீர்வீழ்ச்சி இல் நீராடி நேரத்தை மகிழ்வுடன் செல்கின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V.ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி.


Comments