குழுவினால் ஏற்படும் தலைவலி.. குழப்பத்தில் குடும்பப் பெண்கள்..!!

 

     -MMH

     கோவை மாவட்டத்தில் அதிக அளவில் பெண்கள் மகளிர் குழு என்ற பெயரில் பெண்களுக்கு பணத்தை கொடுத்து விட்டு தலைவலியை ஏற்படுத்தும் குழுக்கள். 

கோவை மாவட்டத்தில் கடந்த சில வருடங்களாகவே மகளிர் குழு என்ற பெயரில் ஒவ்வொரு சிறு தொழில் நிறுவனங்களும் கோவை மாவட்டத்துக்கு ஊடுருவ தொடங்கிவிட்டன. 

ஒரு பகுதியை தேர்ந்தெடுத்து அங்கு பத்து அல்லது பதினைந்து பெண்களை அழைத்து ஒரு குழுவாக உருவாக்கி அவர்களுக்கு சூழ்நிலையை கருத்தில் கொண்டு முன்பணமாக கொடுத்து. வார வசூல் என்ற பெயரில் நடக்கும் இந்த தொழில் ஒவ்வொரு குடும்பப் பெண்களுக்கும் தலைவலியை ஏற்படுத்துகிறது. புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதை கருத்தில் கொண்டு அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

-ஈஷா,கோவை.

Comments