அலட்சியமாக போடப்பட்ட இறைச்சி கழிவுகள்!! - மக்கள் அவதி!

    -MMH

     பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் இறைச்சிக் கடைகள் தெருவுக்குத் தெரு செயல்பட்டு வருகின்றன. இதில் ஒரு சில கடைக்காரர்கள் மட்டும் இறைச்சிக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தி வருகின்றனர். மீதமுள்ளவர்கள் இறைச்சி  கழிவுகளை ரோட்டின் அருகிலும் ரோட்டிலும் அலட்சியமாக கொட்டிவிட்டு  சென்று விடுகின்றனர்.  இதனால் துர்நாற்றம் வீசுவதோடு பல்வேறு விதமான நோய்த்தொற்றுகள் பரவ வாய்ப்புள்ளது. மேலும் இறைச்சி கழிவுகளை சாப்பிட  நாய்கள் சண்டை போட்டுக்கொண்டு ரோட்டில் திரிகின்றன. இதனால் வாகன விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

-M.சுரேஷ்குமார்,கோவை தெற்கு.

Comments