பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் குறைவு..!!

 

    -MMH

     கோவை மாவட்டம் பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் குறைவு. இரவு முதல் மழை பெய்து வருவதால் மக்கள் வெளியே செல்லமுடியாமல் வீட்டில் இருந்த வண்ணம் உள்ளனர்.

கூலி வேலைக்கு செல்லும் மக்கள், தோட்ட வேலை மற்றும் வீடு கட்டும் பணிக்கு செல்லும் மேஷன், சித்தால் மற்றும் தேங்காய் நார் உரிக்க செல்லும் பணியாட்கள் ஆகியவர்கள் மழையின் காரணமாக வேலை இல்லாததால் பணிக்கு செல்ல இயலவில்லை.

நிறைய பணியாட்கள் உள்ளூரில் இருந்து வெளி கிராமங்களுக்கு பொள்ளாச்சி வந்து தான் பேருந்து மாறி செல்ல வேண்டும். ஆதலால் இன்று பேருந்து நிலையம் கூட்ட நெரிசல் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழ்க்கு.

Comments