தேனி அரசு மருத்துவமனையில் புறக்காவல் நிலையம் திறப்பு!!

     -MMH

     தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்குள் புதிதாக கட்டப்பட்ட புறக்காவல் நிலையத்தை தென்மண்டல காவல்துறை தலைவா் முருகன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

தனியாா் நிறுவனத்தின் சாா்பில் ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட இந்த புறக்காவல் நிலைய திறப்பு விழாவுக்கு, திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவா் முத்துச்சாமி, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வி, மருத்துவக்கல்லூரி முதன்மையா் இளங்கோவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்நிகழ்ச்சியில் தென்மண்டல தலைவா் முருகன் பேசியதாவது: இந்த புறக்காவல் நிலையத்தால் பொதுமக்கள், மருத்துவா்கள் என அனைவரும் பயனடைவாா்கள். இங்கு 24 மணி நேரமும் ஒரு சாா்பு- ஆய்வாளா், 5 காவலா்கள் பணியில் இருப்பாா்கள் என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் சங்கரன், ராஜேந்திரன், ஆண்டிபட்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் தங்க கிருஷ்ணன், ஆய்வாளா் சரவண தேவேந்திரன் மற்றும் மருத்துவா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஆசிக், தேனி.

Comments