பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தி குறைந்தது!!

 

-MMH

தேனி மாவட்டம் லோயர் கேம்பில் மின் உற்பத்தி குறைந்தது, மூன்று மின்னாக்கிகளில் 86 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி ஆகிறது. முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் மற்றும் நீர்வரத்து குறைந்து வருகிறது, இதன் எதிரொலியாக லோயர் கேம்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தியும் குறைந்தது.

லோயர் கேம்பில் கடந்த டிச.8 இல் பெரியாறு மின் உற்பத்தி நிலையத்தில் மூன்று வினாடிகளில் தலா, 42 மெகாவாட் வீதம், 126 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி நடைபெற்றது. முல்லைப் பெரியாறு அணையிலிருந்து, தமிழகப் பகுதிக்கு வெளியேற்றும் நீரின் அளவு வினாடிக்கு 1, 400 கன அடியிலிருந்து குறைந்துகொண்டே வந்தது.

வியாழக்கிழமை நிலவரப்படி, முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு வினாடிக்கு 955  கனஅடி வெளியேற்றம் செய்யப்பட்டது.  இதனால் மின்சாரம் நிலையத்திலுள்ள, 3 மின்னாக்கிகளில்  முதல் அலகில் 31 மெகாவாட், 3வது அலகில் 32,  நான்காவது அலகில் 23 என மொத்தம், 86 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தியானது.

அணையின் நீர்மட்டம்: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 120 2.5 அடியாகவும், அணையில் நீர் இருப்பு 3,034 மில்லியன் கன அடியாகவும், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 531 கன அடியாகவும், அணையில் இருந்து நீர் வெளியேற்றம் வினாடிக்கு 955 கன அடியாகவும் இருந்தது. அணையின் நீர்பிடிப்புபகுதியில் மழை இல்லை.

நாளைய வரலாறு செய்திக்காக,

 -ஆசிக் தேனி.

Comments