முகேஷ் அம்பானியின் வீட்டின் சர்ச்சை முடிவு..!

-MMH 

தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு மும்பையில் அன்டிலியா என்ற பங்களா உள்ளது. இந்த பங்களாவின் மதிப்பு ரூ.15 ஆயிரம் கோடி ஆகும். இந்த பங்களாவில் 27 தளங்கள் உள்ளன. இந்த பங்களா இங்கிலாந்தில் உள்ள பக்கிங்காம் அரண்மனைக்கு அடுத்தபடியாக மிகவும் அதிக விலைமதிப்பு கொண்ட பங்களாவாக கருதப்படுகிறது. 

இந்த பங்களா 27 தளங்களை கொண்டிருந்தாலும் அதன் உயரத்துக்கு இணையாக சாதாரண அடுக்குமாடி குடியிருப்புகளில் 60 தளங்களை கட்டமுடியும். அந்த அளவுக்கு இந்த பங்களாவின் ஒவ்வொரு தளமும் அதிக உயரம் கொண்டதாக உள்ளது. இந்த பங்களா இடம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகளும் ஏற்கனவே உருவானது. "அனாதை குழந்தைகள் நலனுக்காக வக்பு வாரியத்துக்கு சொந்தமான இந்த இடத்தை விற்று அதில் கிடைத்த தொகை மூலம் ஏழை குழந்தைகள் படிப்புக்கு உதவ முடிவு செய்யப்பட்டது.

அப்போது இந்த நிலத்தின் விற்பனை தொடர்பாக வக்பு துறை மந்திரி நவாப் மாலிக் மற்றும் வருவாய் துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பல்வேறு சட்ட சிக்கல்களுக்கு இடையே முகேஷ் அம்பானி 1.6 கோடி தொகையை செலுத்தி தடையில்லா சான்று பெற்றார். பங்களாவின் மாடியில்3 ஹெலிபேடு அமைக்க கடற்படையும், சுற்றுச்சூழல் அமைச்சகமும் எதிர்ப்பு தெரிவித்தது. பின்னர் அதற்கான அனுமதி பெறப்பட்டது".

-ஸ்டார் வெங்கட். 

Comments