மீண்டும் பணி நியமனம் கோரி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம!!

   -MMH

     தேனியில் மீண்டும் பணி நியமனம் கோரி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்.

தேனி மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட செவிலியா்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தேனி, பங்களாமேடு திடலில் கரோனா தொற்று அவசர கால செவிலியா் சஙகம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பிரேம்குமாா் தலைமை வகித்தாா்.

மாவட்டத்தில் கரோனா தொற்று காலத்தில் ஆட்சியா் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்ட செவிலியா்கள் கடந்த அக்டோபா் மாதத்துடன் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா். இந்த நிலையில், கரோனா தொற்று காலத்தில் வேறு பணிகளிலிருந்து விலகி, கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு சிறப்பாக பணியாற்றிய தங்களுக்கு மீண்டும் பணி நியமனம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஆசிக்,தேனி.

Comments