மசாஜ் சென்டரில் மஜா..! டிக்-டாக் புகழ் ரவுடி பேபி சூர்யா கைது..!

 

-MMH

ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தி வந்ததாக டிக்-டாக் புகழ் ரவுடி பேபி சூர்யா கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

திருப்பூர் மாவட்டம் செட்டிபாளையம் அடுத்த அய்யம்பாளையம் அருகே உள்ள சபரி நகரைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி. டிக்-டாக்கில் பிரபலமடைந்த இவரது பெயர் ரவுடி பேபி சூர்யா. இவர் வெளியிடும் வீடியோக்கள் படு கவர்ச்சியாக இருப்பதால் இவருக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பட்டளமும், அவரை எதிர்ப்பவர்கள் பட்டாளமும் ஏராளம்.

இந்த நிலையில், திருச்சியில் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தி வந்ததாக டிக்-டாக் புகழ் ரவுடி பேபி சூர்யா கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாநகரில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெற்று வருவதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

அதனடிப்படையில், திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவின்படி, திருச்சி தில்லை நகர், உறையூர், கே.கே.நகர் உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஸ்பாக்களில் விபசாரத் தடுப்புப் பிரிவு போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.

அதில், டிக் டாக் வீடியோ புகழ் சூர்யா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 'தான் பாலியல் தொழிலில் ஈடுபடவில்லை. இந்த மையத்திற்கும் தனக்கும் சம்பந்தமில்லை' என்று ரவுடி பேபி சூர்யா மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், கைது செய்யப்பட்டவர்களுக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக, திருச்சியில் மசாஜ் சென்டர்கள் என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அங்கிருந்த 20க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு காப்பகங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். திருச்சி மாநகரில் போலீசார் நடத்தி வரும் இந்த விபசார வேட்டையும், டிக்-டாக் புகழ் ரவுடி பேபி சூர்யா கைது செய்யப்பட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-பாரூக், சிவகங்கை.

Comments