சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் தொற்றுநோய் அபாயம்!!

    -MMH

     சென்னை.கழிவுநீருடன் மழைநீர் கலந்து சாலையில் தேங்கியிருப்பதால் ஆதம்பாக்கம் பகுதியில் தொற்றுநோய் அபாயம் ஏற்பட்டுள்ளது.சென்னை ஆதம்பாக்கம் பெரியார் நகர் 2 ஆவது தெருவில் கழிவுநீருடன் மழைநீர் கலந்து ஆறாக ஓடுகிறது. இதேபோல் 6 ஆவது தெருவில் மழைநீர் சாலையில் தேங்கியுள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

நேற்றிரவு முதல் பெய்து வரும் மழையால் ஆதம்பாக்கம் பெரியார் நகரில் தேங்கியிருக்கும் மழைநீரை அதிகாரிகள் உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கழிவுநீருடன் மழைநீர் கலந்து சாலையில் தேங்கியிருப்பதால் அத்தியாவசிய பொருட்களை வாங்ககூட வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலைக்கு அப்பகுதிவாசிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

-பாலாஜி தங்க மாரியப்பன், சென்னை போரூர்.

Comments