மக்கள் நீதி மய்யத்தில் யாரும் எம்.எல்.ஏ ஆகப்போவதில்லை - கார்த்தி சிதம்பரம் எம்.பி. கடும் விமர்சனம்!!

 

-MMH

சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், நடிகர்கள் ரஜினி மற்றும் கமல்ஹாசனை சமீப காலமாக கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். மக்கள் நீதி மய்யத்தில் யாரும் எம்எல்ஏ ஆகப்போதில்லை என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கிறிஸ்தவ சபையில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 

எந்த ஒரு நடிகராக இருந்தாலும் பொது வாழ்க்கைக்கு வர வேண்டும் என்றால் பொது மக்களை நேரில் சந்தித்து அவர்களது பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும் கடமை தவறினால் மக்கள் நீதி மய்யத்தின் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வார்கள் என்று கமல் கூறியுள்ளதற்கு பதிலளித்த அவர், ’அந்தக் கட்சியில் எம்எல்ஏக்களே வரப் போவதில்லை. 

பிறகு எதற்கு தீர்மானம் எல்லாம்?’ எனக் கேள்வி எழுப்பினார். ரஜினியின் நிலைப்பாடு பற்றி 'சொல்வதற்கு ஒன்றுமில்லை என்றும், திரைப்படத்தைப் போல் நிஜவாழ்க்கையையும் நினைத்துக் கொள்கிறார்' என்றும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இருக்கக்கூடிய பிரச்சினைகள் பற்றி அவர் ஏதேனும் அறிக்கை விட்டிருக்கிறாரா எனக் கேள்வி எழுப்பிய அவர், எந்த ஒரு கொள்கையும் இல்லாத இந்தக் கட்சி கண்டிப்பாக ஜெயிக்காது என்றும் கூறினார். பாஜகவின் இரண்டாவது கட்சிதான் ரஜினியின் கட்சி எனக் கடும் விமர்சனம் செய்துள்ளார்.

- அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments