தக்காளி ஜாம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க கோரிக்கை ..!!

 

     -MMH 

     கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்று  பகுதிகளில் அதிக அளவில் விவசாயிகள்  தக்காளியை  விவசாய நிலங்களில் பயிர் செய்யது வருகின்றனர் .

பொள்ளாச்சி சந்தைகளில் தக்காளியின் வரத்து அடிக்கடி அதிகரித்து வரும்போது எல்லாம் தக்காளிக்கு உரிய விலை கிடைக்காமல் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும் குறைவான விலைக்கு செல்லுகின்றது. இதனால் பல சமயங்களில் தக்காளியை சாகுபடி செய்யும் விவசாயிகள் கடுமையான நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர் .

இதனை தடுக்க பொள்ளாச்சியில் தக்காளியை கொண்டு ஜாம் தாயரிக்கும் தொழில்சாலை ஏற்படுத்தி தருமாறு பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்று வட்டார விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தக்காளியை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு லாபத்தை தரும் வகையில் இந்த கோரிக்கை விவசாயிகளால் வைக்கடுவது குறிப்பிடத்தக்கது .

 நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-V .ஹரிகிருஷ்ணன்

பொள்ளாச்சி கிழக்கு .

Comments