சிங்கம்புணரி அருகே சாலை விபத்தில் முதியவர் பலி!!

    -MMH

சிங்கம்புணரி: டிச - 2.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம் கணபதிபட்டியைச் சேர்ந்த 65 வயதான மாயழகு மகன் வெள்ளைக்கண்ணு. இவர் இன்று மாலை அருகிலுள்ள பள்ளப்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு கணபதிபட்டி திரும்பிக்கொண்டிருந்தார். 

நான்கு வழிச்சாலையில் அப்போது அறந்தாங்கி சேர்ந்த சிலர் திருச்சியில் இருந்து மதுரை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர். வெள்ளைக்கண்ணு, தனது இருசக்கர வாகனத்தில் கவனக்குறைவாக சாலையின் மறுபுறம் சென்றபோது எதிரே மதுரையை நோக்கி வந்த காரில் மோதி வெள்ளைக்கண்ணு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

- பாரூக்,சிவகங்கை.

Comments