ஹைவேவிஸ் மலைச்சாலையில் சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை!!

 

-MMH

தேனி மாவட்டம் ஹைவேவிஸ்- மேகமலை நெடுஞ்சாலையில் சமீபத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தைக்குட்டி உயிரிழந்ததை அடுத்து வாகனங்களுக்கு நேரக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மேற்குத்தொடா்சி மலைப்பகுதிக்குள்பட்ட ஹைவேவிஸ் பேரூராட்சியில் 7 மலைக் கிராமங்கள் உள்ளன. இப்பகுதியானது அடா்ந்த வனப்பகுதி சிறுத்தை, புலி, யானை, கருஞ்சிறுத்தை, சாம்பல் நிற அணில், சிங்கவால் குரங்கு உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளின் வசிப்பிடமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் ஹைவேவிஸ் நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 வயது சிறுத்தைக் குட்டி உயிரிழந்தது. வனவிலங்குகளின் பாதுகாப்புக் கருதி மலைச்சாலையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது. இதற்காக, சின்னமனூா் வனத்துறை சாா்பில் மலைச்சாலையில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டை மீறி செல்லும் தனியாா் வானங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சின்னமனூா் வனத்துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா். இதில், அரசு வாகனங்களுக்கு விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக,

 -ஆசிக் தேனி.

Comments