ஆச்சர்யமூட்டும் அச்சலேஸ்வரர் மஹாதேவ் கோவில்!!

 

     -MMH

    நம் இந்திய கோவில்களில் நிறைந்திருக்கும் ஆச்சர்யமூட்டும் அதிசயங்களுக்கு அளவே இல்லை. அந்த வரிசையில் மற்றோர் ஆச்சர்யம் ராஜஸ்தானில் அமைந்துள்ள டோல்பூர் எனும் பகுதியில் இருக்கும் அச்சலேஸ்வரர் மஹாதேவ் கோவில். இவர் நிகழ்த்தும் அதிசயம் யாதெனில், இங்கிருக்கும் சிவ லிங்கம் மூன்று முறை தன் நிறத்தை மாற்றி அருள் பாலிக்கிறது.

இந்த கோவிலுக்கு செல்வது அத்தனை எளிதானது அல்ல. காரணம், சற்று ஒதுக்குபுறமான இடமான சாம்பல் எனும் இடத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. இருப்பினும் இக்கோவிலின் அதிசய தன்மையறிந்து ஏராளமான பக்தர்கள் சமீப காலத்தில் இங்கே குவிந்த வண்ணம் உள்ளனர்.

இக்கோவிலின் மற்றொரு ஆச்சர்யம் யாதெனில், இங்கு மட்டும் தான் பகவானின் திருபாதத்தின் பாதவிரல்களுக்கு பூஜைகள் நிகழ்கின்றன. மற்றும் இங்கிருக்கிற நந்தி முழுக்க முழுக்க செம்பால் ஆனது.

இந்த கோவில் 2500 ஆண்டுகளுக்கும் பழமையானது, இங்கிருக்கும் சிவபெருமானின் பாத விரல்களே இந்த பிரபஞ்சத்தை முறையான வரிசையில் வைத்திருக்கின்றன என இங்கிருக்கும் உள்ளூர் வாசிகள் தெரிவிக்கின்றனர்..

இந்த கோவிலின் அருகிலிருக்கும் குளத்தில் மூன்று கல்லாலான நந்தி சிலைகள் உண்டு. சிவபெருமானின் கால் விரல் அச்சினை சுற்றி மெல்ல மெல்ல உருவானதே இந்த கோவில். இந்த கோவில் 9 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது.

இங்கிருப்பதாக இயற்கையாகவே அமைந்த சுயம்பு லிங்கம். இந்த கோவிலை சார்ந்து ஏராளமன ஆச்சர்ய அதிசய கதைகள் சொல்லப்படுகின்றன. அதில் முக்கியமான ஒன்று, ஒரு முறை இஸ்லாமிய மன்னர் ஒருவர் இக்கோவிலை தாக்க முனைந்த போது, இங்குள்ள செம்பினால் ஆன நந்தி எந்தவித தடயங்களும் இன்றி ஆயிரமாயிரம் தேனீக்களை வெளியேற்றியதாக சொல்லப்படுகிறது. அந்த தேனீக்களின் தாக்குதலால் இந்த கோவிலை தாக்க முடியாமல் அந்த மன்னன் திரும்ப சென்றதாக வரலாறு.

அதுமட்டுமின்றி இங்கிருக்கும் சிவலிங்கம் சுயம்பு லிங்கம் ஆவார. அவருடைய உயரத்தை அறிய, சிவலிங்கத்தின் வேரை தேடி அதன் ஆழம் அறிய முற்பட்டனர் சில ஆய்வாளர்கள். ஆனால் அது அவர்களால் முடியாததால் அத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது. இந்த கோவிலில் சிவலிங்கம் ஒரு நாளில் மூன்று வெவ்வேறு நிறங்களில் காட்சி தருகிறார். இதற்கான காரணம் சூரியவொளி என ஒரு சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த கருத்துக்கு ஆதார பூர்வ தரவுகள் இல்லை. காலையில் சிவப்பு நிறத்திலும், மதிய வேளையில் ஆரஞ்சு வண்ணத்திலும் இரவு நேரத்தில் கருப்பு நிறத்திலும் காட்சியளிக்கிறார்.

-சுரேந்தர்.

Comments