லோன் ஆப் மூலம் கடன் பெற வேண்டாம்! - ரிசர்வ் வங்கி எச்சரிக்கை..!

-MMH 

லோன் ஆப் மூலம் கடன் பெற வேண்டாம் என ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், அங்கீகாரமற்ற கடன் செயலிகள் மூலம் கடன் பெற்று பலர் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக தகவல்கள் வருகிறது. அங்கீகாரமற்ற லோன் ஆப் மூலம் கடன் பெற வேண்டாம். அங்கீகாரமற்ற ஆன்லைன் கடன் செயலிகள் மூலம் கடன் வாங்குவது சட்டத்திற்கு புறம்பானது. அங்கீகாரமற்ற ஆன்லைன் கடன் செயலிகள் மீது பொதுமக்கள் புகார் அளிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.

முன்னதாக செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே ஆன்லைன் ஆப்பில் கடன் வாங்கிய வாலிபர் ஒருவர், கடனை திருப்பி செலுத்தவில்லை. இதனால் ஆன்லைன் ஆப் நிறுவனம், அவரின் நண்பர்கள் அனைவருக்கும் கடனை செலுத்தாதவர் என குறுஞ்செய்தி அனுப்பியதால், அந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

-ஸ்டார் வெங்கட்.

Comments