சிங்கம்புணரியில் எம்.ஜி.ஆர். நினைவு நாள்!!

 

-MMH

சிங்கம்புணரியில், எம்ஜிஆர் அவர்களின் 33-வது நினைவு நாளை முன்னிட்டு  சிங்கம்புணரி வடக்கு ஒன்றிய, நகர அதிமுக சார்பாக மவுன ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலம் முடிவில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது அன்னதானம் வழங்கப்பட்டது.

அதிமுக ஒன்றியச் செயலாளர் சொ.வாசு அவர்களின் தலைமையில் சீரணி அரங்கில் இருந்து பேருந்து நிலையம் முன்பு வரை மௌன ஊர்வலம் நடைபெற்றது. மௌன ஊர்வலத்தில் எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணைச்செயலாளர் திருவாசகம், மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் ஏ.வி.சரவணன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் A.சசிகுமார், ஒன்றிய கவுன்சிலர் ஜெயங்கொண்ட நிலை சசிகுமார்,

இளைஞர் பாசறை செயலாளர் ஜெயந்தன், நகர துணைச் செயலாளர் குணசேகரன், நகர அவைத்தலைவர் தவமணி, ஒன்றிய ஐடி விங் செயலாளர் அஸ்வந்த், முன்னாள் நகர செயலாளர்கள் - பெரி.மைலன், எஸ்.ராஜமோகன், முன்னாள் கவுன்சிலர்கள் கக்கன் ராஜா,

ரேவதி, பிரபு, சதீஷ்குமார், பாலாஜி, கூட்டுறவு சங்க தலைவர்கள் சுரேந்திரன், முத்துக்குமார், எம்.ராஜேந்திரன், மகளிரணி தவச்செல்வி, சாந்தி, பொன்னழகு, இளமொழி, அம்மா பேரவைச் செயலாளர் இரவீந்திரன் மற்றும் வார்டு செயலாளர்கள், கிளைக் கழகச் செயலாளர்கள், தொண்டர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

-பாரூக், சிவகங்கை.

Comments