ஆன்லைன் வகுப்புக்காகத் தானே போன் கொடுத்தேன்.. இப்படி மாட்டுவேன் என்று நினைக்கவில்லையே..!!

    -MMH

     மாண்டியா: மகளின் ஆன்லைன் வகுப்புக்காக தனது ஸ்மார்ட்போனை கொடுக்க, அதிலிருந்த வீடியோ மூலம் தந்தையின் கள்ளக்காதல் விவகாரம் அம்பலமான சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. 

கர்நாடகா மாநிலம் மாண்டியாவின் நாகமங்களா பகுதியை சேர்ந்தவர் சுந்தர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகின்றன. கடந்த அக்டோபர் மாதம், 12 வது படிக்கும் தனது மகளின் ஆன்லைன் வகுப்புக்காக ஸ்மார்ட் போனை சுந்தர் கொடுத்துள்ளார். வகுப்பு முடிந்ததும், போனில் இருந்த வீடியோக்களை பார்த்த அவரது மகள் அதிர்ச்சி அடைந்தார். அதில், தனது தந்தை வேறொரு பெண்ணுடன் இருக்கும் வீடியோக்கள் பல இருந்துள்ளன. அதன் மூலம், சுந்தர் நீண்ட காலமாக குடும்பத்திடமிருந்து மறைத்து வைத்திருந்த கள்ளக்காதல் ரகசியம் வெளியானது.

இதனால் குடும்பத்தில் ஒரே சண்டை. மகள்களை அழைத்துக் கொண்டு பிரிந்து செல்வதாக மனைவி பிடிவாதமாக இருந்துள்ளார். இந்த விவகாரம் போலீஸ் நிலையத்திற்கு வந்ததன் மூலம், தற்போதுதான் இச்சம்பவம் குறித்த தகவல்கள் தெரியவந்துள்ளன.  

-சுரேந்தர்.


Comments