வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!

     -MMH

    தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை ஒன்றரை மாதங்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. கடந்தவாரம் மட்டுமே சற்று வறண்ட வானிலை காணப்பட்டது.தற்பொழுது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக  2 நாட்களுக்கு டெல்டா மாவட்டங்கள் உட்பட 5 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

வடகிழக்கு பருவமழை மூலமே தமிழகத்திற்கு நல்ல  மழை பொழிவு எப்பொழுதும் கிடைக்கும். அடுத்தடுத்து தோன்றி உருவான புயலின் தாக்கத்தால் தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாகவே நல்ல மழை பொழிவு  கிடைத்தது .இத்தகைய சூழலில் தென்கிழக்கு வங்கக்கடலில் இலங்கை அருகே உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தற்போது மழை பொழிய தொடங்கியுள்ளது. இந்த மழையானது மேலும்  2 நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது, உள்மாவட்டங்களில்  ஆங்காங்கே பரவலாக மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது . தஞ்சை மாவட்டத்தில் நேற்று இரவு முதலே பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக நீடித்த வறண்ட வானிலை இதனால் சற்று மாறி குளிர்வான  சூழ்நிலை உருவாகியுள்ளது. புயல் எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

நாளைய வரலாறு செய்திக்காக,

- V.இராஜசேகரன், தஞ்சாவூர்.

Comments