பொள்ளாச்சி வனத்துறை அதிகாரிகள் முக்கிய அறிவிப்பு!!

     -MMH

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த  வால்பாறை, ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. 

வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் வழி தடத்தில்  வரையாடுகள், குரங்குகள்,  சிங்கவால் குரங்குகள் உள்ளிட்ட வண விலங்குகள் சாலைகளில் சுற்றித் திரிகின்றன இதனால் வாகனங்களை மெதுவாக செலுத்த வேண்டும், எக்காரணத்தைக் கொண்டும் வனவிலங்குகளுக்கு உணவு வழங்கக்கூடாது. மேலும் வனவிலங்குகளை துன்புறுத்தக்கூடாது மீறி செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொள்ளாச்சி வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

-M.சுரேஷ்குமார்,கோவை தெற்கு.

Comments