மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அ.தி.மு.க. முன்னாள் மேயர் தி.மு.க.வில் இணைந்தார்!!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அ.தி.மு.க.வை சேர்ந்த கோவை மாநகராட்சி முன்னாள் மேயரும், முன்னாள் மாவட்ட செயலாளருமான டாக்டர் கணபதி ராஜ்குமார் நேற்று தி.மு.க.வில் இணைந்தார்.
அதேபோல பா.ஜ.க. மாநில மருத்துவரணி முன்னாள் தலைவரும், அகில இந்திய தேவேந்திரகுல வேளாளர் உறவின்முறை மகாஜன சங்க நிறுவனருமான டாக்டர் டி.கயிலைராஜன் தலைமையில் பா.ஜ.க. முன்னாள் விவசாய அணி துணை செயலாளர் ஏ.ஜி.கலாநிதி, இந்தியன் வங்கி சங்கத்தின் மாநிலத்தலைவர் செல்வ தியாகராஜன், மதுரை, திருச்சி, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, திண்டுக்கல் மாவட்ட தேவேந்திரகுல வேளாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் அ.தி.மு.க.வை சேர்ந்த மீனவரணி பகுதி செயலாளர் பி.திருஞான சம்பந்தம் தலைமையில் தே.மு. தி.க. இளைஞரணி பகுதி செயலாளர் எம். கார்த்திகைராஜா, முன்னாள் வட்ட செயலாளர் கே.வெள்ளத்துரை, வக்கீல் எம்.அலாவுதீன் ஆகியோரும் தி.மு.க.வில் இணைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் அ.ம.மு.க. இலக்கிய அணி தலைவர் மு.கிருஷ்ணராஜ், அ.தி.மு.க.வை சேர்ந்த து.விஸ்வநாதன், ஊராட்சி தலைவர் த.காந்தி, பா.ஜ.க. ஊராட்சி துணைத்தலைவர் கே.சேகர் ஆகியோரும் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சியின்போது தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி. உள்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
வடசென்னை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராயபுரம் மனோ அதிமுகவில் இணைந்தார் திமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின்- கே.எஸ்.அழகிரி வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து காஞ்சியில் இன்று திமுக ஆர்ப்பாட்டம்: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
-பாலாஜி தங்கமாரியப்பன்,சென்னை போரூர்.
Comments