தியேட்டர்களில் தொடர்ந்து கூட்டம் இல்லை திண்டாடும் தியேட்டர் முதலாளிகள்...!!

 

-MMH

கோரோனா என்னும் கொடிய நோய் பொழுதுபோக்கும் அம்சமான திரையரங்குகளையும் விட்டுவைக்கவில்லை கடந்த சில மாதங்களாகவே அரசு அதிகமாக மக்கள் கூடும் பகுதிகளை கட்டுப்பாடு விதித்து வந்த நிலையில். சினிமா திரையரங்குகள் மூடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது இந்நிலையில் மக்கள் வீட்டிலேயே முடங்கி இருந்த சூழ்நிலையில் திரையரங்குகள் திறக்கப்படவில்லை இதனால் பெரும் நஷ்டத்திற்கு ஆளான திரையரங்கு உரிமையாளர்கள்.

அரசுக்கு நாளடைவில் சில கோரிக்கைகளை வைத்து வந்தன இதை கருத்தில் கொண்ட தமிழக அரசு சில கட்டுப்பாடுகளுன் திரையரங்குகளை இயக்கலாம் என்று உத்தரவிட்டது அப்படிப்பட்ட நிலையில் திரையரங்கு திறந்தும் பொதுமக்கள் சரிவர  வருவதில்லை என்று திரையரங்கு முதலாளிகள் கூறுகின்றனர். இதனால் திரையரங்குகள் பெரும் நஷ்டத்தில் ஓடுவதாகவும் பொதுமக்கள் வந்து ஆதரவு தந்தால் மட்டுமே நஷ்டத்தில் இருந்து விடுபடுவோம் என்றும் திரையரங்க உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

-ஈஷா கோவை.

Comments