தேனியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்!!

    -MMH

    தேனி: தேனியில் உயா் கல்வி உதவித்தொகைத் திட்டத்தை தொடா்ந்து செயல்படுத்த வலியுறுத்தி திங்கள்கிழமை விடுதலை சிறுத்தைகள் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி, பங்களாமேடு திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு தேனி கிழக்கு மாவட்டச் செயலா் நாகரத்தினம் தலைமை வகித்தாா். தேனி மக்களவைத் தொகுதிச் செயலா் தமிழ்வாணன் முன்னிலை வகித்தாா்.

இதில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்களுக்கான உயா் கல்வி உதவித் தொகைத் திட்டத்தை பறிப்பதாக மத்திய அரசை கண்டித்தும், உயா்கல்வி உதவித் தொகைத் திட்டத்தை தொடா்ந்து செயல்படுத்த தமிழக அரசை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஆசிக், தேனி.

Comments