மழை நீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

    -MMH

     கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நேற்று இரவு முதல் தற்போது 04 மணிவரை தொடர்ந்து லேசான மழை பெய்து வருகிறது நாம் காணமுடிகிறது.

பொள்ளாச்சி பல்லடம் சாலை,பாலக்காடு சாலை, கிழக்கு உடுமலை சாலையில் மலை நீர் தேக்கம் அடைந்து அப்படியே நிற்பதால் பொது மக்கள் நடப்பதற்கும் இரு சக்கர வாகனங்கள் செல்லவும் மந்த நிலை ஏற்பட்டுள்ளது நாம் காண முடிகிறது.

மறப்பேட்டை பகுதிகளில் தினமும் வாகன நெரிசல் அதிகம் காணப்பட்டாலும் தற்போது மழை நீர் தேக்கத்தால் இன்னும் போக்குவரத்து பாதிப்பு அடைகிறது.

காவல்துறை அதிகாரிகள் மழையை பொருற்படுத்தாமல் போக்குவரத்து நெரிசலை சீர் செய்து வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.

Comments