மேய்ச்சல் மாடுக ளை காப்பாற்றுவதற்காக தோட்டத்திற்க்குள் புகுந்த தனியார் பேருந்து!!

 

     -MMH

கம்பம்: தேனி மாவட்டம் கூடலூர் அருகே மேய்ச்சல் மாடுகளை காப்பாற்றுவதற்காக, தனியார் பேருந்து தோட்டத்திற்குள் புதன்கிழமை புகுந்தது.

தேனி மாவட்டம் கூடலூரில் இருந்து பெரியகுளம் செல்வதற்காக தனியார் பேருந்து கம்பம் நோக்கி புதன்கிழமை புறப்பட்டது. பேருந்து முன்புறம் மேய்ச்சலுக்காக மாடுகள் கூட்டமாக சென்று கொண்டிருந்தன.

அப்பாச்சி பண்ணை அருகே செல்லும் பசு தொழு மாடு ஒன்று பேருந்தின் குறுக்கே வந்தது.

அந்த மாட்டின் மீது மோதாமல் இருப்பதற்காக தனியார் பேருந்து ஓட்டுநர் மணிவண்ணன் பேருந்தை வலதுபுறம் திருப்பினார். அப்போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தனியார் தோட்டத்திற்குள் புகுந்து மரங்களிடையே முட்டி மோதி நின்றது.

இதை சாலையில் சென்ற பார்த்தவர்கள் ஓடிச்சென்று பேருந்தினுள் இருந்தவர்களை காப்பாற்றினர். பேருந்தில் பயணம் செய்த 4 ஆண்கள் 3 பெண்கள் ஆகியோருக்கு லேசான ஊமைக் காயங்கள் ஏற்பட்டது.

கூடலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் முத்துமணி விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஆசிக்,தேனி.

Comments