மூன்று வயது உடைய யானை பரிதாபமாக உயிரிழப்பு!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பாறை சுற்றுவட்டாரப் எஸ்டேட் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. இந்நிலையில் மானாம்பள்ளி வனப் பகுதிக்கு உட்பட்ட பட்ட கிராம்பு பகுதியில் மூன்று வயது உடைய யானை காலில் அடிபட்டு நடக்கமுடியாமல் தவித்து வருவதாக இப்பகுதி மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் யானைக்கு சிகிச்சை அளித்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தது இறந்த யானையை வன உயிரினங்களுக்கு உணவு ஆக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-M.சுரேஷ்குமார், கோவை தெற்கு.
Comments