மளமளவென சிகரம் தொடும் மல்லிகை பூவின் விலை!!

  -MMH

வானிலை மாற்றதால் தற்போது நிலவும் தொடர் பனி காரணமாக பூக்களின் வரத்து மிகவும் குறைந்து காணப்படுவதாலும் , கோவில்களில் மார்கழி மாத சிறப்பு வழிபாடுகளாலும் அனைத்து  பூக்களின் விலையும் அதிகரித்துள்ளது.

அதன் எதிரொலியாக பொள்ளாச்சி பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் சற்று அதிகரித்தே காணப்பட்டது.அதிலும் குறிப்பாக மல்லிகை பூவின் விலை கிலோவிற்கு குறைந்தபட்சமாக 1000 ரூபாய் முதல் அதிக்கப்பச்சமாக 1300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. மல்லிகை பூவை தொடர்ந்து முல்லை பூவின் விலை கிலோவிற்கு குறைந்தபட்சமாக 800 ரூபாய் முதல் அதிக்கப்பச்சமாக 890 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-V.ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி கிழக்கு.

Comments