பெரியகுளம் அருகே காட்டாற்றில் சிக்கி இளைஞர் பலி!!

     -MMH

    தேனி மாவட்டம், பெரியகுளத்தைச் சேர்ந்த செல்லராமு (37) மற்றும் அவரது நண்பர்கள் குருகார்த்திக், பாண்டி, ரமேஷ் உள்பட 6 பேர் கல்லாற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.

கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்த மழையால் கல்லாற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தில் செல்லராமு உள்பட 6 பேரும் சிக்கிக் கொண்டனர். தீயணைப்புத்துறையினர் தகவலறிந்து இரவு சம்பவ இடத்திற்கு சென்று குருகார்த்திக், பாண்டி, ரமேஷ் உள்பட 5 பேரை மீட்டனர்.

செல்லராமுவை தேடி வந்த நிலையில் 12 கி.மீ தூரம் இழுத்து செல்லப்பட்டு மேல்மங்கலம் அருகே முத்தையா கோயில் தடுப்பணையில் உடல் கரை ஒதுங்கியது. உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுபியுள்ளனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஆசிக்,தேனி.

Comments