சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் கமலஹாசன் தேர்தல் பரப்புரை!

-MMH

 மநீம தலைவர் கமல்ஹாசனின் மூன்றாம் கட்ட தேர்தல் பரப்புரையை 6 மாவட்டங்களில் மேற்கொள்ள இருக்கிறார். இன்று முதல் டிசம்பர் 30-ஆம் தேதிவரை மக்கள் நீதி மய்யத் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் மூன்றாம் கட்ட தேர்தல் பரப்புரை செய்கிறார்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "சீரமைப்போம் தமிழகத்தை" என்கின்ற பெரும் முழக்கத்துடன் வரவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று , தமிழகத்தை தலைநிமிர செய்வதற்கான முயற்சியின் தொடர்ச்சியாக, மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் மூன்றாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை வருகின்ற 27, 28, 29, 30 ஆகிய தேதிகளில் திருச்சி, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, வேதாரண்யம், வேளாங்கண்ணி, நாகூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கும்பகோணம், புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, பரமக்குடி, அருப்புக்கோட்டை ஆகிய பகுதிகளில் நிகழ்த்தவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

-ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Comments