கும்பகோணம் அருகே சிக்னலை மதிக்காத மாடுகள்!! - கண்டு கொள்ளுமா காவல்துறை..!
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுக்கா, மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் சமூக ஆர்வலர்கள் மனு:
மனுவில்,- ஆன்மீக நகரமான கும்பகோணத்தில் கோவில்கள் நிறைந்த ஊரான கும்பகோணத்தில் பெரிய கடை வீதி, பூக்கடை வீதி, மற்றும் அரசு மருத்துவமனை, கோர்ட் வளாகம் போன்ற நெருக்கமான பகுதிகளில் நகரம் முழுவதும் சுமார் 200 மாடுகள் நகரம் முழுவதும் சுற்றித் திரிவதால் பொதுமக்களுக்கு இடையூறு.
நடுரோட்டில் மாடுகள் அடுத்து கொள்வதாலும் நின்று கொள்வதாலும் வாகன விபத்துகளும் அடிக்கடி நடைபெறுகின்றன. சமீபத்தில் பெரிய கடைவீதியில் ஒரு முதியவரை மாடு மூட்டி ரத்தவெள்ளத்தில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சுற்றித் திரியும் மாடுகளை கட்டுக்குள் கொண்டுவர மாடு வளர்ப்போர் முன்வர வேண்டும், பொது நல அமைப்புகளும், பொதுமக்களும் இணைந்து மாவட்ட கலெக்டர் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
-வினோத்குமார்,கும்பகோணம்.
Comments