முல்லைப் பெரியாறு அணை பகுதியில் மழை! நீர்வரத்து அதிகரிப்பு!!

 

-MMH

முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால் அணைக்குள் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாதலால் டிச. 4 இல் அணைக்கு வினாடிக்கு 431 கன அடி தண்ணீர் மட்டுமே வந்தது, அதன்பிறகு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய ஆரம்பித்தது. டிச. 5 இல் வினாடிக்கு 952 கன அடியாக இருந்த நிலையில், பெரியாறு அணைப்பகுதியில் 19.0 மில்லி மீட்டர், தேக்கடி ஏரிப்பகுதியில் 17.2 மில்லி மீட்ட்ர மழையும் பெய்தது. இதனால் அணைக்கு  டிச. 6 இல் வினாடிக்கு 1,176 கன அடியாக நீர் வரத்து அதிகரித்து வருகிறது. 

ஞாயிற்றுக்கிழமை அணையின் நீர்மட்டம் 124.20 அடி உயரமாகவும், நீர் இருப்பு 3,460 மில்லியன் கன அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 1,176 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 1,290 கன அடியாகவும் இருந்தது. பெரியாறு அணைப்பகுதியில் 2.2 மில்லி மீட்டர், தேக்கடி ஏரியில் 7.0 மில்லி மீட்டர் மழையும் பெய்தது.  அணையிலிருந்து, வெளியேற்றப்படும் நீரின் அளவால், லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார நிலையத்தில், நான்கு மின்னாக்கிகளில், மூன்று மின்னாக்கிகளில் முதல் அலகில் 38 மெகாவாட், இரண்டாவது அலகில் 42 மெகாவாட், மூன்றாவது அலகில் 42 மெகாவாட் என மொத்தம் 122 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஆசிக் தேனி. 

Comments